Random image

ஜனவரி 29 : அமேசான் பிரைமில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் வெளியீடு

மும்பை

ரும் 29 ஆன் தேதி முதல் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் அமேசான் பிரம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பொங்கலுக்காக விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் வெளியானது. தயாரிக்கப்பட்டு வெகுநாட்களாக ரிலீசுக்கு காத்திருந்த இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.  இந்த திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்டிரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் ஜனவரி 29 அன்று தங்கள் தளத்தில் டிஜிட்டலில் வெளியாகும் என அமேசான் பிரைம் ஓடிடி இன்று அறிவித்துள்ளது.  இந்த திரைப்படத்தை இந்தியா உள்ளிட்ட 240 நாடுகளிலுள்ள அமேசான் பிரம் சந்தாதாரர்க்ள் ஜனவரி 29 முதல் வீட்டில் இருந்த படியே காண முடியும்.  வெளியாகி 15 நாட்களில் இந்த படம் ஓடிடியில் வெளியாகிறது.

அமேசான் பிரைம் வீடியோவின் இந்திய பிரிவு தலைவர் விஜய் சுப்ரமணியம், “அமேசான் ப்ரைம் வீடியோவில் மாஸ்டர் படம் வெளியாவது பற்றி அறிவிப்பில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் ஒன்று மாஸ்டர். இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்களுக்கு இந்த மாதம் இப்படத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த டிஜிட்டல் பிரீமியர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் மட்டுமன்றி, உலகமெங்கும் உள்ள தங்களின் வீடுகளின் பாதுகாப்பு மற்றும் வசதியிலிருந்து இந்த சமீபத்திய தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை ரசிப்பதற்கான தேர்வை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என அறிவித்துள்ளார்.