நண்பர் அஜித் போல் கோட் சூட் அணிந்து வந்தேன்: விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் கோர்ட் ஷுட் எல்லாம் அணிந்து வந்திருந்தார் விஜய்.

’மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசி முடிந்தவுடன், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பாவனா மற்றும் ஆர்.ஜே.விஜய் இருவரும் விஜய்யிடம் சில கேள்விகளை எழுப்பினார்கள். அதில் கோட் சூட் குறித்த கேள்விக்கு விஜய், “ஒவ்வொரு விழாவுக்கும் ரொம்ப சுமாராக உடையணிந்து செல்கிறீர்கள் என காஸ்ட்டியூமர் பல்லவி இந்தக் கோட் கொடுத்தாங்க. சரி, நம்மளும் நண்பர் அஜித் மாதிரி கோட் போட்டுப் போவோம் என்று வந்தேன். நன்றாக இருக்கிறதா?” என்று பதிலளித்தார் விஜய்.

விஜய்யின் இந்த பதிலைச் சற்றும் எதிர்பாராத அரங்கிலிருந்தவர்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த ஆரவாரம் அடங்க சில மணித்துளிகள் பிடித்தது.