சென்னை

மிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் இன்று சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு மாநிலம் எங்கும் நடந்து வருகிறது.   காலை முதலே மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.  இதுவரை பல அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாக்களித்துள்ளனர்.

சென்னையில் நடிகர்கள், அஜித், அவர் மனைவி ஷாலினி, ரஜினிகாந்த், கமலஹாசன், சிவகுமார். சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் காலையிலேயே வாக்குச் சாவடி சென்று வாக்களித்துள்ளனர்.

சென்னை நீலாங்கரையில் வசிக்கும் விஜய் இன்று சைக்கிளில் வந்து தனது வாக்கை அளித்துள்ளார்.   அவர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைச் சுட்டிக் காட்ட இவ்வாறு வந்ததாக அவரது ரசிகர்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.