தங்களுடைய சீரியல்களின் புதிய அத்தியாயங்கள் எப்போது ; விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு….!

கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பணிகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டன.

பல சீரியல்கள் தங்களது ஒளிபரப்பையே ரத்து செய்துள்ளன. குறிப்பாக,சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘அழகு’, ‘கல்யாணப் பரிசு’, ‘தமிழ்ச்செல்வி’, ‘சாக்லேட்’ ஆகிய 4 சீரியல்களையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜூலை 8-ம் தேதி முதல் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது.

இதனால் கடந்த 3 மாதங்களுக்காக பழைய சீரியல்களே ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது விஜய் டிவி தங்களுடைய சீரியல்களின் புதிய அத்தியாயங்கள் அனைத்துமே ஜூலை 27-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஜய் டிவி தங்களுடைய ட்விட்டர் பதிவில் “ரிப்பீட் எல்லாம் ஸ்டாப்பு. ஒரிஜினல் இப்போ ஸ்டாட்டு” என்ற தலைப்புடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ‘ஆயுத எழுத்து’, ‘மெளன ராகம்’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாரதி கண்ணம்மா’, ‘தேன்மொழி’, ‘காற்றின் மொழி’, ‘பாக்கியலட்சுமி’ உள்ளிட்ட தங்களுடைய மெகா தொடர்கள் அனைத்துமே ஜூலை 27-ம் தேதி ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.