‘ஐரா’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது விஜய் டிவி…!

இயக்குநர் சர்ஜுன் இயக்க , கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்கும் படம் ஐரா இந்த படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்க இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

‘அறம்’ படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

நாளை ரிலீசாக இருக்கும் இப்படத்திற்கு சென்சார் போர்டு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இந்நிலையில், ‘ஐரா’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி கைப்பற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ வாங்கியுள்ளது. தொடர்ந்து, மூன்றாவது முறையாக நயன்தாரா படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையைப் பெற்றுள்ளது அமேசான் ப்ரைம் வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published.