விஜய் டிவி – ஜீ தமிழ் சீரியல் ஒளிபரப்பு குறித்து அதிரடி முடிவு…..!

கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பணிகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் சில சீரியல்கள் தங்களது ஒளிபரப்பையே ரத்து செய்துள்ளன. குறிப்பாக,சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘அழகு’, ‘கல்யாணப் பரிசு’, ‘தமிழ்ச்செல்வி’, ‘சாக்லேட்’ ஆகிய 4 சீரியல்களையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .

மேலும், விஜய் டிவி மற்றும் ஜீ தொலைக்காட்சி ஆகிய சேனல் தரப்பில் இந்தப் பிரச்சினைத் தொடர்பாக

“ஒளிபரப்பாகி வந்த எந்த சீரியல்களும் நிறுத்தும் முடிவு இதுவரை எடுக்கவில்லை. நடிகை, நடிகர்களைக்கொண்டு நிறையை அத்தியாயங்கள் எடுத்து வைத்தபிறகு சரியான திட்டமிடலுடன் புதிய சீரியல்களையும், சீரியல் தொடர்ச்சிகளையும் ஒளிபரப்ப முடிவெடுத்துள்ளோம். அதற்கு எவ்வளவு காலங்கள் ஆனாலும் பழைய சீரியல்களை ஒளிபரப்புவோம். இனிமேல் இது போன்ற சிக்கல்கள் வந்தால் சமாளிக்க இது வழிவகுக்கும். ஆகையால் 25-க்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் கையில் வைத்துக் கொண்டு தான் புதிய சீரியல்கள், சீரியல் தொடர்ச்சிகள் தொடங்கப்படும்” என தெரிவித்துள்ளது.