அடையாறு வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்த நடிகர் விஜய்…!

 

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் இன்று (ஏப்.18) நடந்தது.

இந்நிலையில், நடிகர் விஜய் காலை 7.30 அளவில் சென்னை அடையாறு காமராஜர் அவென்யூவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களித்தார்.

மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்துச் சென்றார். ரசிகர்கள் கூடியதால் வாக்குச்சாவடியில் சிறியளவில் பரபரப்பு ஏற்பட்டது.

கார்ட்டூன் கேலரி