விஜய், நிச்சயம் அரசியலுக்கு வருவார்:  “முதல்வர்” உறுதி

--

டிகர் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று சர்கார் படத்தில் முதல்வராக நடித்த பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம், கடந்த 6ம் தேதி தீபாவளி அன்று வெளியானது. கதைத்திருட்டு சர்ச்சை, திரையரங்கில் அதிக கட்டண வசூல், ஆளுங்கட்சி எதர்ப்பு காட்சிகள், அரசு நலத்திட்டங்களை இழிவு படுத்தியது, வில்லி கதாபாத்திரத்துக்கு ஜெயலலி தாவின் இயற்பெயரான கோமலவள்ளி என்பதை வைத்தது.. இப்படி சர்ச்சைகள் றெக்கைகட்டி பறக்கின்றன.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து அப்படத்தில் முதல்வர் வேடத்தில் நடித்துள்ள நிஜ அரசியல்வாதியான பழ. கருப்பையாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், “எல்லா படங்களையும் போலவே, சர்கார் படமும்,  தணிக்கைக் குழு அனுமதிக்குப் பிறகுதான் வெளி வந்திருக்கிறது. தவிர ஏற்கெனவே, படத்தில் இருந்த  வசனங்கள் அனைத்தும் அப்படியே வெளிவரவில்லை. அதில், ஆளும் அ.தி.மு.க கட்சி பற்றி மட்டுமல்ல, எதிர்க்கட்சியான தி.மு.க பற்றிய வசனங்கள் பலவும் இருந்தன. அவை நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக,  இந்தி எதிர்ப்பு தொடர்பாகக் கேலிசெய்யும் வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டது. அதை சென்சார் போர்டு புரிந்துகொண்டுதான் நீக்கியிருக்கியது.

ஆகவே இதன் பிறகு ஆளாளுக்கு இதை நீக்கு அதை நீக்கு என்று கூறுவது தவறு” |என்ற பழ.கருப்பையா, “விஜய் அரசியலுக்கு வருவது உறுதி. அது, அவரிடம் பேசும்போது அவர் பேச்சிலேயே பலமுறை வெளிப்பட்டது”  என்று  உறுதிபட தெரிவித்தார்.