சென்னை

தேமுதிக சார்பில் தேனி தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட உள்ளார்.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சி தலைவர்களும் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் உடன் பேசி வருகின்றனர். ஆனால் தேமுதிக இது குறித்து இரு கட்சிகளுக்கும் எவ்வித முடிவும் சொல்லாமல் இழுக்கடித்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.

அப்போது அவர் விஜயாகாந்த் உடல் நிலை குறித்து விஸ்ரீக்க வந்ததாக தெரிவித்தார். இந்நிலையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசுகையில் ஸ்டாலின் அரசியல் குறித்து பேசவே வந்ததாக தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு முன்பு பாஜக சார்பில் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்ற போதும் விஜயகாந்த் அதற்கு சம்மதிக்கவில்லை என தெரிய வந்தது.

இந்நிலையில் தேமுதிக செயல்வீரரக்ள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேனி தொகுதியில் இருந்து போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் தேமுதிக வின அனைத்து நிர்வாகிகளும் விஜயபிரபாகரன் வெற்றிக்கு ஆதரவு தரவேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.