விஜயபாஸ்கர், கீதாலட்சுமி இன்று ஆஜராகவில்லை!

சென்னை :

டந்த 7ந்தேதி நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டை தொடர்ந்து இன்று  மீண்டும் விசாரணைக்க ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியிருந்தது வருமானவரித்துறை.

ஆனால்,  இன்று இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர்களுக்கு பதிலாக அவர்களது ஆடிட்டர் ஆஜரானதாக கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக பணபட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் காரணமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி., சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் ஏப்ரல் 7-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக அனைவருக்கும்  சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில்,  இஅமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கீதாலட்சுமிக்கு மீண்டும் ஆஜராக வருமானவரித்துறை கடந்த வாரம் சம்மன் அனுப்பியது.

இதன் காரணமாக இருவரும் இன்று நேரில் ஆஜராவதாக எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்கள் ஆஜராவதை தவிர்த்தனர். அவர்களுக்கு பதில் அவர்களது ஆடிட்டர்கள் ஆஜரானதாக கூறப்படுகிறது.

 

You may have missed