விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த் கடந்த மாதம் 22ம் தேதி நள்ளிரவு மியாட் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார்.  இது கட்சி தொண்டர்களிடையே மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், விஜயகாந்த் மனைவி பிரமலதாவோ, விஜயகாந்த்  வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அதன் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வருவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலை மேலும் நலிவடைந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரம் கூறுகிறது.