விஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு : தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை

தே மு தி க தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சிரமப்பட்டு வருகிறார்,

இதையொட்டி அவர் சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பி வந்தார்.

கடந்த சில நாட்களாக அவர் வீட்டில்  ஓய்வில் உள்ளார்.

கடந்த 14 ஆம் தேதி அன்று தேமுதிகவின் 14 ஆம் ஆண்டு விழா நடந்தது.

இதையொட்டி விஜயகாந்த் தனது இல்லத்தில் சாலிகிராமத்தில் உள்ள அவர் இல்லத்தில் கட்சிக் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார்.

அப்போது அவர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அவருக்கு  இப்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் அவர் மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவலில் கூறப்பட்டுள்ளது.