ராமண்ணா வியூவ்ஸ்:
டந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல், கம்யூனிஸ்டுகள் இல்லாத சட்டசபை என்பதில் ஆரம்பித்து பலவித ஆச்சரியங்களைக் கொடுத்திருக்கிறது.
குறிப்பாக தே.மு.தி.க.வின் ஆழமான தோல்வி.  அக் கட்சி வெறும் 2.2 சதவிகித வாக்குகளே பெற்று, தேர்தல் அங்கீகரததை இழந்து நிற்கிறது.   அக் கட்சியின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் மூன்றாவது இடத்துக்கு வந்து டெபாசிட்டை பறிகொடுத்திருக்கிறார்.
தேர்தலுக்கு முன்பு  அக்கட்சியுடன் கூட்டணி வைக்க,  பா.ஜ.க., தி.மு.க., ம.ந.கூட்டணி என்று ஆளாளுக்கு போட்டி போட்டதும், அத்தனை பேரிடமும்  விஜயகாந்த் பேச்சு வார்த்தை நடத்தி கண்ணாமூச்சு ஆடியதும் நினைவுக்கு வருகிறது.
அது மட்டுமல்ல.. “விஜயகாந்த்தான் முதல்வர், வைகாதான் துணை முதல்வர்..” என்றெல்லாம் பகிரங்கமாக பொதுக்கூட்டத்திலேயே அறிவித்தார் விஜயகாந்த் மச்சானும் தே.மு.தி.க. இளைஞரணி தலைவருமான சுதீஷ்.  “அய்ய்யோ.. எனக்கு பதவி வேணாம்.. அந்த ஆசை கிடையாது” என்று பெருந்தன்மையுடன் வைகோ மறுத்ததும் நடந்தது.

"தமிழன் என்று சொல் படப்பிடிப்பில் விஜயகாந்த்
“தமிழன் என்று சொல் படப்பிடிப்பில் விஜயகாந்த்

ம.ந. கூட்டணி தலவர்களும் தே.மு.திகவின் பிரேமலதா, சுதீஷ் ஆகியோரும், “எங்கள் கூட்டணிதான் அமைச்சரவை அமைக்கும் அடுத்த முதல்வர் விஜயகாந்த் தான்.” என்று அத்தனை உறுதியாக தமிழகம் முழுதும் பேசிவந்தார்கள்.
விஜயகாந்தும் இப்படித்தான் பேசினார். “ஆட்சிக்கு வந்தவுடன் இதைச் செய்வேன், அதைச் செய்வேன்” என்றார்.
அத்தனை நம்பிக்கை இருப்பவர், தேர்தல் முடிவு வரும் அன்றோ மறுநாளோ.. என்னென்ன புரோகிராம்கள்  என்று மனதிற்குள் திட்டம் போட்டிருப்பார்.
அதாவது, வென்ற எம்.எல்.ஏக்களை அழைத்து கூட்டம் போடவேண்டும், அவர்களது சட்டமன்ற தலைவராக விஜயகாந்தை தேர்ந்தெடுக்க வேண்டும், அவர்களது ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் சென்று கொடுக்கவேண்டும், பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும், அந்த பதவி ஏற்பில் கலந்துகொள்ள வேண்டு்ம்…   இதெல்லாம்தானே அவர் மனதில் இருந்திருக்கும்.
ஆனால் தேர்தலில் கடும் தோல்வி ஏற்பட்ட மறுநாளே  தான் நடிக்கும்  “தமிழன் என்று சொல்” என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அந்த ஸ்டில்களையும் விஜயகாந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.
“இதில் என்ன தவறு.. தேர்தல் முடிவு தனக்கு சாதகமாக இல்லை என்றவுடன், தனது தொழிலான நடிப்புக்குத் திரும்பியிருக்கிறார்.. இதில் என்ன குற்றம் கண்டீர்” என்கிறீர்களா..
பொறுமை…
ஒரு படத்தின் படப்பிடிப்பை ஒரே இரவில் தீர்மானித்துவிட.. திட்டமிட்டு விட முடியாது.
குறிப்பிட்ட அந்த காட்சியின் ஸ்கிரிப்ட் தயாராக இருக்க வேண்டும்  அன்றைய படப்பிடிப்பு அரங்கு புக் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  ஒளிப்பதிவாளர் – அவரது உதவியாளர்கள், இயக்குநர் – அவர் உதவியாளர்கள், செட் போடு்ம் ஆர்ட் டைரக்டர் – அவரது உதவியாளர்கள், லைட்டிங் ஆட்கள், இவர்களுக்கான சாப்பாடு செ்யபவர்கள், வாகனங்கள் – ஓட்டுனர்கள்.. இப்படி மலை அளவு திட்டமிட்டால்தான் படப்பிடிப்புக்கு போகமுடியும்.
ராமண்ணா
ராமண்ணா

சரி.. வேறு காட்சிக்கு பதிலாக விஜகாந்த் நடித்ததை  எடுத்திருக்கலாமே என்று சிலர் கேட்கட்கூடும். அதையும் அப்படி திடுமென எடுக்க முடியாது.  அவருக்கான வசனங்கள், அவருக்கு மேக் அப் போடுபவர், அவருடன் இணைந்து நடிக்க வேண்டியவர்கள்.. இப்படி பல்வேறு விசயங்கள் இருக்கின்றன.
ஆக, தேர்தல் முடிவு வந்த மறுநாளே விஜயகாந்த் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் என்றால், பல நாட்கள் முன்னதாகவே திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்திருக்கும்.
தேர்தல் முடிவுக்கு மறுநாள் தனக்கு அரசியல் வேலை இருக்காது.. நடிக்கும் வேலைதான் இருக்கும் என்பதை விஜயகாந்த ஏற்கெனவே தீர்மானிததிருக்கிறார். அதாவது  தனக்கும் தன் கட்சிக்கும் கூட்டணிக்கும் ஏற்படப்போகும் தோல்வியை அவர் முன்னதாகவே கணித்திருக்கிறார்.
ஆனால் எப்படி அத்தனை தீவிரமாக, “நாங்கள்தான் ஆட்சி அமைப்போம், நான்தான் முதல்வர்” என்று விஜயகாந்தால் பேச முடிந்தது?
ஹூம்..எல்லாம் அரசியல்…!