அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் தனது 29வது திருமண நாளை மனைவி பிரேமலதாவுடன் இணைந்து கொண்டாடினர். இருவரும் கேக் வெட்டி ஊட்டிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

vijayakandh

தேதிமுக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் சில நாட்களாக அமெரிக்காவில் தங்கி சிகிச்சை எடுத்து வருகிறார். அவருடன் அவ்வபோது குடும்ப உறுப்பினர்களும் சென்று வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா தங்களின் 29வது ஆண்டு திருமண நாளை அமெரிக்காவிலேயே கேக் வெட்டிக் கொண்டாடினர். இருவரும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டிவிடும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இது தேமுதிக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

vijayakanth

மக்களவை தேர்தல் வரும் நிலையில் தேமுதிக பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனால் சிகிச்சை முடிந்து தங்கள் தலைவர் எப்போது எதிரும்ர்புவார் என தொண்டர்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் நல்ல நிலையில் திரும்பி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அவரது மனைவி ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.