அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விஜயகாந்த்! வெளியான புகைப்படங்கள்!

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அங்கு  கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தே.மு.தி.க. தலைவர் கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் குன்றி இருந்தார். இதையடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில் இரு நாட்களுக்கு முனஅ அவரது உடல் நலம் முன்னேற்றம் இல்லை எனவும் அவரை சந்திப்பதற்காக உறவினர்கள் அமெரிக்கா விரைந்துகொண்டிருப்பதாகவும் சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவின.

இச்செய்திகளை விஜயகாந்த் குடும்பத்தினர் மறுத்தனர். அமெரிக்க மருத்துவர்களின் சிகிச்சையால விஜயகாந்த் உடல்நலத்தில் முன்னேறறம் ஏற்பட்டிருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் முகநூல் பக்க்தில், “கிறிஸ்துமஸ் விழாவை அமெரிக்காவில், நண்பர்களோடு கொண்டாடிய போது எடுத்த படங்கள்” என்ற குறிப்போடு மனைவி மற்றும் நண்பர்களுடன் விஜயகாந்த் இருக்கும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

 

கார்ட்டூன் கேலரி