சிங்கப்பூரில் விஜயகாந்த்! (புகைப்படங்கள்)

சென்னை,

டந்த 29ந்தேதி மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்ற விஜயகாந்த், அங்குள்ள கட்டிடம் ஒன்றின் முன்பு நின்று அழகாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு காரணமாக சரியாக பேச முடியாமல் உள்ள விஜயகாந்த், ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மீண்டும் சிகிச்சை பெற கடந்த 29ந்தேதி தனது மனைவியுடன் பயணமானார்.

முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது என்றும், எங்கள் கட்சி யாருக்கும் ஆதரவு கொடுக்காது என்றும் கூறினார்.

இந்த இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த விஜயகாந்த்,  ஆர்.கே.நகரில் பணபலம் உள்ளவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்றார்.

மேலும் தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடுகள் பற்றிய கேள்விக்கு,   முறைகேட்டை தடுக்கவே மாலை 5 மணிக்கு மேல் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், பணபலம் உள்ளவர்களே வெற்றி பெறுவார்கள்   என்றும் கூறினார்.

இந்நிலையில், தற்போது விஜயகாந்த் ஜாலிமூடில் கட்டிடம் ஒன்றில் முன்பு வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரத்தின் அருகே நின்று ஒய்யாரமாக  போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் முகநூல் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

சிங்கப்பூர் சென்ற விஜயகாந்த், விமான நிலையத்தில் வீல் மூலம் கூட்டிச்சென்றதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியிருந்த நிலையில், தற்போது, விஜயகாந்த் ஆரோக்கியமாக இருப்பது போலவும், ஜாலியான மன நிலையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.