அமெரிக்காவில் விஜயகாந்த்: புகைப்படம் வெளியீடு

சென்னை:

சிகிச்சைக்காக அமெரிக்க சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது நலமுடன் இருப்பதாக, புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவரது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் இந்த படங்களை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டு களாக உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் (ஜூலை) 7ந்தேதி நள்ளிரவு சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவருக்கு  ஏற்கனவே சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் சிகிச்சை கொடுத்தும், அவரது உடல்நிலை தேறாமல், தொடர்ந்து அவர் பேச முடியாமல் தவித்து வந்த நிலையில், அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்றார்.

கடந்த ஒரு மாதமாக அங்கு சிகிச்சை பெற்று விஜயகாந்த் தற்போது முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில், அவர்  தனது குடும்பத்தினருடன் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதுபோல தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலும் விரைவில் நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், அவரது குரல்வளம் சரியாகி இருப்பதாகவும், தேமுதிக எம்எல்ஏ பாரத்த சாரதி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.  அதற்கேற்றால்போல, விஜயகாந்தின் படம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வரும் விஜயகாந்த் மேலும் சில வாரங்கள் அங்கு தங்கி யிருந்து, பூரண குணம் அடைந்த பிறகே தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி