விஜயகாந்த் இன்று வீடு திரும்புகிறார்: தேமுதிக சுதீஷ் தகவல்

சென்னை:

நேற்று இரவு திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று அக்கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

மூச்சுத்திணறல் காரணமாக நேற்று இரவு  தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் தேமுதிக தலைமை  இதுகுறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று அவர் வீடு திரும்புவார் என்றும் கட்சியின்  துணைப்பொதுச்செயலாளரான சுதீஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தேமுதிக தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.