Random image

படப்பிடிப்பில் விஜயகாந்த்!

b

கடந்த 16ம் தேதி நடந்த சட்டமன்றத் தேர்தலில், ம.ந.கூட்டணி மற்றும் த.மா.கா.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.கழகம். அவரே, அக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  மிகுந்த உற்சாகத்துடன் அக்கூட்டணி தலைவர்கள் தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்தனர்.

நேற்று தேர்தல் முடிவு வெளியானது.   இக்கூட்டணிக்கு பெரும் தோல்வி அடைந்தது.

a

குறிப்பாக தே.மு.தி.க. தனது வாக்கு வங்கியை பெருமளவில் இழந்து வெறும் 2.2 சதவிகித வாக்குகளையே பெற்றது. அதன் தலைவர் விஜயகாந்த், தான் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தார்.

இந்த நிலையில், “தற்போது ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுவிட்டது.  ஆனால் எப்போதும் சத்தியம்தான் வெல்லும்” என்று சிம்பிளாக அறிக்கை விட்ட விஜயகாந்த், சினிமாவில் நடிக்க கிளம்பிவிட்டார்.

c

சிறிது நேரத்துக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் “இப்போது…  “தமிழன் என்று சொல்” படப்பிடிப்பில்..” என்று பதிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட் படங்களையும் விஜயகாந்த் வெளியிட்டிருக்கிறார்.