மதுரை:

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி இன்று தேமுதிக சார்பில் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு அக் கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

“ஏய்… பீடா….!

பீடா அமைப்பு தமிழ்நாட்டில்தான் இருக்கிறதா… கேரளாவில் யானையைக் கட்டி போரடிக்கிறான்….ஒட்டகத்தை வைச்சு வண்டி இழுக்கிறான்… அவனைப்போய் தடுக்க மாட்டாயா…டேய் பீடா… பாத்துக்க…

விவசாயிகள் யாரும் சாகலைன்னு ஒரு மந்திரி சொல்றார்… கலெக்டர்களே பொய் சொல்லக்கூடாது… கரெக்டா சொல்லனும்…

கேரளாவுல  யானையையும், ராஜஸ்தான்ல ஒட்டகத்தையும் தடை செய்ய இந்த பீட்டாவால முடியுமா?

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர தமிழக அரசு ஏன் தயங்குது?

இந்தியில் பேட்டான்னா குழந்தை… அந்த பேட்டா வேற… இந்த பீடா வேற….
யாருக்கும் பயப்படமா அவசர சட்டம் போடுங்க தமிழக அரசு…

எனக்காக மந்திரி சபையைக் கூட்டி, எனக்கு அடிபணிய வேண்டாம்… ஆனா, விஜயகாந்த் சொன்னதை கேட்கணும்…

மாடுகளை தங்கள் வீட்டு பிள்ளைகளாக வளர்க்கிறாங்க… உழவன் மகன் ரெக்ளா ரேஸ் நடிச்சேன். அது வேற கதை… அதை விட்டு விடுங்க. என் மகன் கேட்கிறான் தமிழன் என்று சொல்லடான்னு ஒரு படம் நின்னு போச்சே அதைப்பத்தி பேசுன்னு சொல்றான். அதைப்பத்தி நான் பேசினால் சுயநலம்… இதைப்பத்தி பேசறது பொதுநலம்… 2வது பையந்தான் நடிக்கிறான்…

ஏன் இதைச்சொல்கிறேன் என்றால், அவர்கள் என்னை நல்லா பார்த்துக்கிறாங்க. அது போல மாட்டையும் பாதுகாப்பா பார்த்துக்கணும்…

கூட்டத்தைப் பத்தி எனக்கு கவலையில்லை. நான் சாதாரணமா 3 மாடு தான் வளர்க்கிறேன். அதுக்கு நான் படற பாடு… கொம்பு சீவணும், குளிப்பட்டணும்…

பேட்டா… பேட்டா… அவ்வளவுதான் சொல்வேன் நீங்க புரிஞ்சுக்கணும்…
நன்றி மக்களே…. நீங்க வெயில்லே நிக்க கூடாது”-   இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.