மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்!

சென்னை,

ல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக வரும் 9ந்தேதி விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் வரும் 9ந்தேதி, மத்திய மாநில அரசுகளை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக்கோரி, மாநில மற்றும் மத்திய அரசை கண்டித்து வரும் 9ந்தேதி மதுரையில் எனது தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விஜயகாந்த் கூறி உள்ளார்.

ஏற்கனவே தேமுதிக சார்பில் நடைபெற்ற  கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த் ஜல்லிக்கட்டு போட்டியை நிச்சயம் நடத்தியே தீருவேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.