தமிழகத்தில் நிலவி வரும் வரலாறு காணாத குளிர் குறித்து விஜயகாந்த் டிவிட்!

சென்னை:

மிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் வரலாறு காணாத குளிர் குறித்து அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் டிவிட் செய்துள்ளார்.

அதில், அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது.. என்று தெரிவித்து உள்ளார்.

உடல்நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், 2வது  கட்ட சிகிச்சைக் காக மனைவி பிரேமலதாவுடன் கடந்த ஆண்டு டிசம்பர் 18ந்தேதி அன்று  இரவு அமெரிக்கா புறப்பட்டுச்  சென்றார்.  அவருடன்  அவரது  மனைவி பிரேமலதா,  அவரது 2-வது  மகன்  சண்முக பாண்டியன்  ஆகியோர்  உடன்  சென்றுள் ளனர்.

விஜயகாந்த்துக்கு  சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.  இதற்கிடையில்,  கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களையும்,  அக்வாமேன் திரைப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்கில் கண்டு மகிழ்ந்ததாக தனது மனைவி பிரேமலதா உடன் பார்த்து மகிழ்ந்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் நிலவி வரும் குளிர் குளித்தும் பதிவிட்டு உள்ளார்.  அவ்வப்போது அவரது புகைப்படங்கள் பதிவிடப்பட்டு வருவது தேமுதிக கட்சியினிரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது அமெரிக்காவில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வரும்  விஜயகாந்தும் அவரது குடும்பத்தினரும், சிகிச்சை முடித்த பிறகு மார்ச் மாதத்தில் சென்னை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.