அமெரிக்காவில் விஜயகாந்த் தெளிவாக பேசுகிறார்….பார்த்தசாரதி

கரூர்:

தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது.

இதில் கட்சியின் மாநில துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி பேசுகையில்,‘‘ தமிழக மக்கள் அ.தி.மு.க- தி.மு.க. மீது வெறுப்பில் இருக்கிறார்கள். அரசியலுக்கு புதிதாக வரும் ரஜினி, கமலை பற்றியும் பேசவில்லை. மாறாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பே மக்களிடம் உள்ளது.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் முன்பை விட இப்போது தெளிவாக பேசுகிறார். என்னிடம் அவ்வப்போது ஆய்வு கூட்டம் பற்றி கேட்டறிந்து வருகிறார். விஜயகாந்த் திரும்பி வரும்போது தமிழகத்தில் அ.தி.மு.க -மற்றும் தி.மு.க. இருக்காது. மக்கள் தே.மு.தி.க. பக்கம் வந்துவிட்டனர்’’என்றார்.

கார்ட்டூன் கேலரி