விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்திற்கு வருவார்……!? பிரேமலதா

சென்னை:

தேர்தல் பிரசாரத்திற்கு  இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத் திற்கு வருவார், தேமுதிக  பொருளாளர் பிரேமலதா மீண்டும் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தேமுதிக வேட்பாளர் உள்பட அதிமுக, பாமக உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்த பிரேமலதா இன்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு  அமோக வரவேற்பு உள்ளதாக கூறியவர், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

செய்தியாளர்கள், கருத்து கணிப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பிரேமலதா, அது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு என கூறினார்.

விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்திற்கு வருவாரா என்ற கேள்விக்கு,வருவார் என பதிலளித்தார்.