விஜயகாந்த்துக்கு திடீர் மூச்சுத் திணறல்…! தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை:

டல்நலமில்லாமல் சிகிச்சை எடுத்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் உடடினயாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விஜயகாந்த்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று  நன்கு குணமடைந்ததாக புகைப்படங்கள் அனுப்பி இருந்தார். இந்த நிலையில்,  கடந்த 20ம் தேதி விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த்,  நேராக கருணாநிதியின் சமாதிக்கு சென்ற அவர் மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் அவர் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில் இன்று இரவு 8 மணியளவில் அவருக்கு  திடீர் என மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடன் பிரேமலதா விஜயகாந்த் மற்றும்  அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர்