சீமான் மீது பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் நடிகை விஜயலட்சுமி புகார்….!

 

தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த பிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி.

தொடர்ந்து பட வாய்ப்புகள் சரிவர இல்லாததால் சின்னதிரையில் நடித்து வந்தார். சீமான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ படத்திலும் நடித்துள்ளார் . அப்போது சீமானுடன் உறவில் இருந்துள்ளதாக கூறி வருகிறார் .

சமீப காலமாக சீமானுடன் அவர் நெருக்கமாக இருந்த புகைப்படம் வீடியோ என தினம் தினம் வெளியிட்டு வருகிறார் . மேலும் முகநூலில் தன்னை சீமான் கட்சி ஆட்கள் மிரட்டுவதாக லையில் கூறி வருகிறார் .

தன்னை 3 ஆண்டுகளாக காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக கூறிய விஜயலட்சுமி அவருடன் பிறந்தநாள் கொண்டாடும் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டார்.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி நேற்று தனது சகோதரியுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சி கூட்டங்களில் என்னை குறித்து அவதூறாகப் பேசி வருகிறார்கள். இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே சீமான் மற்றும சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.