விஜயபாஸ்கர், சரத்குமார் ஆகியோருக்கு வருமானவரித்துறை சம்மன்

 

சென்னை:

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவக்கல்லூரி துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை அறிவித்தது. முக்கியமாக ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டி.டி.வி தினகரன் சார்பாக பண விநோயகம் செய்யப்பட்டது குறித்த தகவல்கள் கிடைத்ததாக சில ஆவணங்களை வருமானவரித்துறை வெளியிட்டது.

இந்த நிலையில் விஜயபாஸ்கர், சரத்குமார், கீதா லட்சுமி ஆகியோர் வருமாவரி அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.