விஜயசாந்தியின் மறு அரசியல் பிரவேசம்!

ஒரு காலத்தில் தென் இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்பட்டவர் விஜயசாந்தி.   இவர் நடித்த பல தெலுங்குப் படங்கள் தமிழிலும் இந்தியிலும் டப் செய்யப்பட்டு பல மொழிகளிலும் வெற்றிக் கொடி நாட்டியவர்.    இவர் நடித்து தமிழில் டப் செய்யப்பட்ட படங்களில் பூ ஒன்று புயலானது, வைஜயந்தி ஐ பி எஸ் ஆகிய படங்கள் தமிழிலும் வெற்றிப் படங்கள் ஆகும்.

விஜயசாந்தி சினிமா வாய்ப்புகள் குறைந்த பிறகு அரசியலில் நுழைந்தார்.   முதலில் பா ஜ க வில் தன்னை இணைத்ஹ்டுக் கொண்டார்.   அதன் பின் அங்கிருந்து விலகி சோனியா காந்தியை சந்தித்து காங்கிரசில் சேர்ந்தார்.   ஆனால் தனக்கு கட்சியில் முக்கியத்துவம் தரவில்லை என எண்ணம் கொண்டார்.  அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார்.

சிரஞ்சீவி நடிக்கவுள்ள இரு படங்களில் இவரை நடிக்க அழைக்கவே தனது உடல் எடையைக் குறைத்து நடிக்க தயாரானார்.   ஆனால் இவருக்கு அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டவைகள் சிறு வேடம் என்பதாலும் முக்கியத்துவம் இல்லாததாலும் அந்த படங்களில் நடிக்க மறுத்துவிட்டார்.

தற்போது மீண்டும் அரசியலில் நுழைய திட்டமிட்ட விஜயசாந்தி டில்லி சென்று ராகுலை சந்தித்துள்ளார்.  அவரிடம் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தப் போவதாக கூறி உள்ளார்.  தற்போது தெலுங்கானா அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து பரபரப்பை விஜயசாந்தி ஏற்படுத்துவார் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.