தெலுங்கானா : விஜயசாந்தியின் பிரசார மேடை சரிந்து விழுந்தது

ர்னூல்

காங்கிரஸ் பிரமுகரும் பிரபல நடிகையுமான விஜயசாந்தி தேர்தல் பிரசாரம் செய்ய இருந்த மேடை சரிந்து விழுந்தது.

தேர்தலை முன் கூட்டி எதிர் கொள்வதற்காக தெலுங்கானா முதல்வர் சட்டப்பேரவையைக் கலைத்தார். வரும் டிசம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் டீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் முக்கிய பிரமுகரான விஜயசாந்தி பல இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று கர்னூல் மாவட்டத்தில் அச்சம்பேட்டை பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் விஜயசாந்தி உளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

அந்த கூட்ட மேடை திடீரென எடை தாங்காமல் கீழே விழுந்துள்ளது. இதனால் யாருக்கும் அடிபடவில்லை எனினும் அங்கு மிகுந்த பரபரப்பு உண்டானது. சிறிது நேரத்தில் மேடை சரி செய்யப்பட்டது. அதன் பிறகு விஜயசாந்தியின் தேர்தல் பிரசாரம் தொடர்ந்தது.