சென்னை,

“தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர், மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று  தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தி உள்ளது.

சென்னையில்,  பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் அகராதி வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் உடபட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். ஆனால், காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி மட்டும் எழுந்து நிற்காமல் அமர்ந்து இருந்து அவமதிப்பு செய்தார். ஆனால்,  விழா முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கும்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார்.

இது தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்தி யதாக விஜயேந்திரர் மீது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  அரசியல் கட்சியினரும் காஞ்சி இளைய மடாதிபதியின் அகங்கார செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெரியார் திராவிடர் கழகமும் விஜயேந்திரர் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும், விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய  மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.