மகளை காதலித்தவரை கொலை செய்த விஜய் ரசிகர் மன்ற தலைவர்!

தூத்துக்குடி,

ன்னை காதலிக்காவிட்டால், ஆசிட் ஊற்றிவிடுவேன் என தனது மகளை மிரட்டிய காதலரை கொலை செய்துள்ளனர் மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள்.

தூத்துக்குடியில் தனது மகளை காதலித்த வாலிபரை தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் பில்லாஜெகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்தவர் பில்லா ஜெகன். இவர்  தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். திமுக விசுவாசியாயுமாவார். அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர்.

இவரது மகள் நெல்லயில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த சகாயராஜ் என்பவரது மகன் சச்சின் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று சச்சின், ஜெகன் மகளிடம் தன்னை காதலிக்காவிட்டால் ஆசிட் வீசிவிடுவதாக மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, போலீசார் சச்சினை தேடி வந்தனர்.

இந்நிலையில் பில்லா ஜெகன் மற்றும் அவரது உறவினர்கள் சச்சினை சுற்றி வளைத்து பிடித்து கடத்தி சென்றுள்ளனர். தூத்துக்குடி அருகே உள்ள தனசேகரன் நகர் பகுதியில் உள்ள பில்லா ஜெகன் அலுவலகத்துக்கு தூக்கி சென்று சரமாரியாக அடித்தும், அரிவாளால் வெட்டியும் உள்ளனர்.

இந்த தாக்குதல் காரணமாக சச்சின் உயிரிழந்துள்ளார். அதையடுத்து அவரது உடலை காரில் தூக்கிச் சென்று ஜோதிநகர் காட்டுப்பகுதியில் வீசி விட்டனர்.

சச்சின் கடத்தப்பட்டது அறிந்த போலீசார் அவரை தேடி ஜோதிநகர் பகுதிக்கு விரைந்தனர். அங்கு சச்சின் இறந்துகிடந்தது தெரிய வந்தது.

அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச் சம்பவத்தில் தொடர்புடை பில்லாஜெகனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.