குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய விஜயகாந்த்! வைரலாகும் செல்பி புகைப்படங்கள்

சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று தனது  பிறந்த நாளை குடும்பத் துடன் செல்பி எடுத்து கொண்டாடினார். இதுதொடர்பான புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகரும் தேமுதிக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழக முதல்வர் இபிஎஸ், துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட அரசியல் கட்சித்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கட்சியினர் என அனைத்து தரப்பினரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், விஜயகாந்த் தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும்படி தனது கட்சியினருக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலையிலேயே விஜயகாந்த்  தனது குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடினார். தனது  மனைவி மற்றும் மகன்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அதை, விஜயகாந்த் தனது டிவிட்டர் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.   தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.