பேட் மிண்டன் விளையாட்டில் தூள் கிளப்பும் நடிகர் விஜய் மகள்- வைரலாகும் புகைப்படம்

டிகர் விஜய் மகள் திவ்யா சாஷா, பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனையாக உருவெடுத்துள் ளார். ஏற்கனவே விஜயின் மகன், குறும்பட இயக்குனராகவும், நடிகராகவும் களமிறங்கி, கலக்கி வரும் நிலையில், தற்போது  மகள் சாஷா பேட்மிண்டனில் அசத்தி வருவதாக கூறப்படுகிறது.

விஜய் மகள் சாஷா

இதுகுறித்த, அவர் படித்துவரும் தனியார் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், சாயிஷா பங்கு பெற்ற பேட்மிண்டன் அணி  சமீபத்தில் நடைபெற்றபோட்டியில் 3வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வரும் விஜய்யின் மகள் சாஷா, அந்தப் பள்ளியின் பாட்மிண்டன் குழுவில் ஒரு வீராங்கனையாக இடம்பெற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை, தன்னுடைய அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பள்ளி பகிர்ந்துள்ளது.

விஜய் மகள் திவ்யா சாஷா பங்குபெற்றுள்ள பேட்மிண்டன் குழு

ஏற்கனவே பேட்மிண்டன் விளையாட்டில்  மிகுந்த ஆர்வமுள்ளவர் திவ்யா சாஷா என்பதும் அவருடைய விளையாட்டை சமீபத்தில் விஜய் நேரில் ரசித்த புகைப்படங்கள் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.