சென்னை: நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் 811 திரையரங்குகளில் நாளை ரிலீசாகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மாஸ்டர் திரைப்படம் பொங்கல் ரிலீஸாக வந்திருக்கிறது. ஜனவரி 13ம் தேதிதான் படம் ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், 11ம் தேதியே படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் லீக் ஆகின.

லீக் ஆன காட்சிகளை ரசிகர்கள் பகிர வேண்டாம் என மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இந் நிலையில் 811 திரையரங்குகளில் மாஸ்டர் படம் நாளை ரிலிசாகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் தவிர கேரளாவிலும் மாஸ்டர் படம் ரிலிசாகிறது.

இதேபோன்று சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஈஸ்வரன் படமும் திரையரங்குகளில் வெளியாகிறது. கிட்டத்தட்ட 247 தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.