விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்…

--
நெட்டிசன்:
ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
விஜய் நடித்த மாஸ்டர்  திரைப்படம், தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் என்று அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்..
மிகவும் சந்தோஷமான விஷயம். விஜய் படம் மட்டுமல்ல ரஜினி அஜித் போன்றோரின் படங்களாக இருந்தாலும் இப்படித்தான் இருக்கவேண்டும்.
ஆறு மாதங்களாக மூடிக்கிடக்கும் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும் போது அதிக அளவு ரசிகர்கள் பட்டாளம் கொண்ட முன்னணி நடிகர்களின் படங்கள் ஓப்பனிங்காக அமைவது அந்த தொழிலுக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும்..
கோடிக்கணக்கான முதலீடு, லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் மறுமலர்ச்சி காணப்படவேண்டும்.
அதேவேளையில், கொரோனாவால் நொந்து போயிருக்கும் மக்களிடம் கொள்ளையடிக்கும் போக்கை டிக்கெட் விலையில் கண்டிப்பாக கைவிட்டே ஆகவேண்டும்..
அதிக செலவில்லாமல் நல்ல கதையம்சங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது டாப் ஸ்டார்களாக இருப்பவர்களுக்கு நல்லது. இத்துப்போன பன்ச் டயலாக்குகளை பேசி, ஏகப்பட்ட பேரை அடிக்க படத்தயாரிப்பாளர்மீது செலவுகளை ஏற்றுவது கொரோனாவுக்கு பிறகும் தொடர்ந்தால் அது கடைந்தெடுத்த மடத்தனமாகவே இருக்கும்.
மன அழுத்தத்தை போக்கிக்கொள்ள தியேட்டர்களுக்கு வரப்போகிற கொஞ்சம்பேரையும் கடுப்பேத்தாமல் இருப்பதில் கவனமாக செயல்படவேண்டியது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சினிமா உலகினரின் கடமை..
சுருக்கமாக சொன்னால், உங்க வாழ்க்கையை நீங்களே கெடுத்துக்காதீங்க..