தொலைக்காட்சியில் மவுனமாக்கப்பட்ட விஜய் பட வசனங்கள்!

சென்னை

விஜய் நடித்து அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தின் வசனங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.   அந்தப் படத்தில் ஜி எஸ்டி மற்றும் டிஜிடல் இந்தியா குறித்த வசனங்களை பாஜக தலைவர்கள் ஆட்சேபித்தனர்.    மருத்துவர்களைப் பற்றிய காட்சிகளுக்கு மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.     ஆயினும் மெர்சல் நல்ல வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின.

நேற்று பொங்கலை முன்னிட்டு ஜீ தொலைக்காட்சியில்  இந்தப்  படம் முதல்முறையாக ஒளிபரப்பாகியது.   அப்போது இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய வசனங்களை இந்த படத்தை ஒளிபரப்பிய ஜீ தமிழ் தொலைக்காட்சி மவுனமாக்கி இருந்தது.

படத்தில் வடிவேல் பேசும் டிஜிடல் இந்தியா என்னும் வசனமும்,  கோயிலுக்கு பதில் மருத்துவ மனை கட்டலாம் என்னும் விஜய் பேசும் வசனமும் மவுனமாக்கப் பட்டிருந்தது.   அதே போல ஜி எஸ் டி என்னும் வார்த்தை வரும் காட்சியில் அந்த வார்த்தை மவுனமாக்கப் பட்டிருந்தது.

இதனால் ரசிகர்களிடையே ஏமார்றம் ஏற்படும் என்பதலோ என்னமோ,  ஆளப்போறான் தமிழன் என்னும் பாடல் இருமுறை ஒளிபரப்பப்பட்டது.