தென்கொரியத் திரைப்பட விழாவில் இடம்பிடித்துள்ள விஜயின் ‘மெர்சல்’

சியோல்:

விஜய் நடித்த மெர்சல் படம்  தென்கொரிய திரைப்பட விழாவில் பங்கு பெற்றுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற பிரிட்டன் திரைப்பட விழாவில் பங்குபெற்று சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதினை பெற்றிருந்த நிலையில், தற்போது தென்கொரிய திரைப்பட விழாவிலும் மெர்சல் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

தென்கொரியாவில் 22வது புச்சென் சர்வதேச திரைப்படவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், விஜய் நடித்துள்ள வெளியான மெர்சல் படம் திரையிடப்படவுள்ளது என்று தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் அறிவித்துள்ளது.

இது விஜய் ரசிகர்களிடைய பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.