சர்க்கார் கதை விவகாரம்: ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் (வீடியோ)

சென்னை:

ர்க்கார் படத்தின் கதை விவகாரம்  தொடர்பாக புகார் எழுந்த நிலையில், அதுகுறித்து புகார் அளித்த கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சர்க்கார் கதை விவகாரம் குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் வீடியோ வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.

அதில், எல்லாருக்கும் வணக்கம்.  வழக்கம்போல பெரிய ரூமர்ஸ் இஸ்டத்துக்கு ஸ்பிரட் ஆகிட்டு இருக்கு. அதனால் ஒரு சின்ன விளக்கம்.

இந்த விவகாரம் குறித்து, பாக்யராஜ் சார் தன்னை கூப்பிட்டு, இதுமாதிரி பிரச்சினை  போய்ட்டுக்கு, ஒருவருடைய ஓட்டை கள்ள ஓட்டாக போட்டிருக்கிறார்கள் என்ற கதையின் கரு குறித்து ஏற்கனவே ஒரு அசிஸ்டெண்ட் 10 வருடத்திற்கு முன்னாலேயே  கதை பதிவு செய்திருக்கிறார் என்றும், அவரை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் டைட்டில் போடுங்கள் என்று கூறினார். அதற்கு நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன்.

மற்றபடி இந்த படத்தின் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஏ.ஆர்.முருகதாஸ்தான்… அதில் எந்தவித மாற்றமும் இல்லை… ஹேப்பி தீபாவளி… என்ஜாய் என்று கூறி உள்ளார்.

சர்க்கார் படத்தின் கதை தொடர்பாக வழக்கு தொடர்ந்த கதாசிரியர்  வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் முருகதாஸ் ஆகியோர் சமரசம் பேசியுள்ள நிலையில், சர்க்கார் படக்கதை வருண் ராஜேந்திரனின் கதைதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த விளக்கம் அளித்துள்ளார்.

அதேவேளையில், தனது செங்கோல் கதையை நடிகர் விஜய்க்கு பரிசளிப்பதாக புகார் அளித்த கதாசிரியர் வருண் ராஜேந்திரன் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏஆர். முருகதாஸ் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை:

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Vijay's Sarkar story affair: Director AR Murugadoss explanation (video), சர்க்கார் கதை விவகாரம்: ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் (வீடியோ)
-=-