இயக்குனரான நடிகர் விஜயின் மகன்: வைரலாகும் ‘ஜங்ஷன்’ குறும்படம்

சென்னை:

டிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கி நடித்துள்ள ஜங்ஷன்” குறும்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

ராகிங் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், தன்னை ராக்கிங் செய்பவரை தாக்கு கத்தியுடன் செல்கிறார் ஜேசன் சஞ்சய்.

தமிழக முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் சமீபத்தில் அரசுக்கு எதிராக சர்க்கார் என்ற படத்தில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் விஜய் உடன் நடனமாடி பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.

இந்த நிலையில், தற்போது கல்லூரி வாழ்க்கையில் நுழைந்துள்ள ஜேஷன், தனது தந்தையை போல சினிமா உலகில் களமிறங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது பிலிம் மேக்கிங் துறை குறைத்து உயர்படிப்பு படித்து வரும் ஜேசன், ஜங்ஷன் என்ற குறும்படத்தை தயாரித்து உள்ளார்.

இந்த படத்தில்,  தன்னை ராகிங் செய்யும் ரோஹித் என்பவரை தாக்க முடிவு செய்து கையில் கத்தியுடன் சென்ற ஜேசன் ரோகித் வருகைக்காக காத்திருக்கிறார். ஆனால், அப்போது கிரிக்கெட் மட்டையுன் வரும் அவர்மீது அடையாளம் தெரியாத ஒரு கார் மோதி விபத்தை ஏற்படுத்துகிறது.

காரை ஓட்டி வந்தவர், காரிலிரிருந்து இறங்கி ரோஹித்தின் கிரிக்கெட் மட்டையையும் , ஜேசனையும்  பார்த்துவிட்டுஎஸ்கேப் ஆகிறார். அப்போது, காரில் அடிபட்டு ரோட்டில் கிடக்கும் ரோஹித்தை  ஜேசன்  அதிர்ச்சி கலந்து பார்க்கிறார். பின்னர் தனது நண்பர்கள் உதவியுடன் அவரை வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.

இந்த குறும்படத்தை விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

You may have missed