விஜய் பாடிய ’வெறித்தனம்’ பாடல் 100 மில்லியன் பார்வைகள் தாண்டியது..

சை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பிகில் படத்தில் விஜய் பாடிய பாடல் ’வெறித்தனம்’. இப்படத்தை அட்லீ இயக்கினார். படம் வெளியாகி வெற்றி பெற்றது. முன்ன தாக பாடல்கள் யூ டியூபில் வைரலாக பரவியது.
இதில் இடம் பெற்ற வெறித்தனம் பாடல் வீடியோ யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைத் தாண்டி யுள்ளது. அதாவது 10 கோடி பார்வைகள் தாண்டி இருக்கிறது. பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த பாடல், 2019 பிகில் பிளாக் பஸ்டரில் ஹீரோ அறிமுகமுக பாடலாக படத்தில் இடம் பெற்றது.


பிகில் பட இசை ஆல்பத்திலிருந்து வெளியான இரண்டாவது சிங்கிள் என்றாலும், வெறித்தனம். ’சிங்கப் பெண்ணே’ பாடல் வீடியோவைக் கடந்து, 100 மில்லியன் பார்வைகளை எட்டியது. சிங்கப்பெண் தற்போது 68 மில்லியன் பார்வைகளைக் கொண் டுள்ளது.
பிகிலின் ஆடியோ வெளியீட்டில், பேசிய தளபதி விஜய், ’இப்படத்தில் என்னை பாட ரஹ்மான் அழைப்பாரா?’ என்று உறுதியாக தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில், இந்த பாடலை பாட விஜய்யிடம் அட்லீ கேட்டுக் கொண்டபோது அவர் தயங்கினாராம்.