தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனமும், தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சியும், டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைமும் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கர்நாடகாவில் படப்பிடிப்பில் இருந்த விஜய் சேதுபதி தனது ரசிகருக்கு சிறப்பான சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். படப்பிடிப்பின் போது தன்னை பார்க்க வந்த ரசிகருக்கு பிறந்த நாள் என்பதை அறிந்த விஜய் சேதுபதி அவருக்கு கேக் வெட்டி ஊட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.