முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி…!

‘சங்கத்தமிழன்’ படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி

விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சங்கத்தமிழன்’.

முதன்முறையாக் இதில் இரட்டை வேடங்களில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தகவல் வெளியானது.

இதுவரை மீசை வைத்த விஜய் சேதுபதியின் கதாபாத்திரப் படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு மதுரை, தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது என படக்குழு தெரிசித்துள்ளனர்.

இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவியும், ஆடியோ உரிமையை சோனி நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

கார்ட்டூன் கேலரி