டந்த  2015 ம் ஆண்டு திரைக்கு  வந்த ’புறம்போக்கு எனும் பொதுவுடமை’ படத்தில் எஸ்பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்தார். அதன்பிறகு தற்போது லாபம்  படத்தில் அவருடன் இணைந்திருக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்தின் டிரெய்லர் இன்று  வெளியானது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

விவசாயிகள் நிலத்தில் ஆலை கட்ட வரும் வில்லனை எதிரிக்கும் விஜய் சேதுபதி. அதற்கு மக்கள் தரும் ஆதரவு,  எதிர்ப்பு, விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம் என பல அரசியல் தெறிக்கும் வசனங்களுடன் டிரெய்லர் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் இருவித கெட்டப்பில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.   டி.இமான் இசை அமைக்கி றார். ஸ்ருதிஹாசன் 2 வருடத்துக்கு பிறகு நடிக்கும் படம் லாபம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் காதல் டூயட் பாடும் நாயகியாக இல்லாமல் மக்களுக்காக போராடும் பெண்ணாக ஸ்ருதி தோன்றும் காட்சிகள் டிரெய்லரில் இடம் இடித்திருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகி வசனங்களால் பரபரத்துக்கொண்டிருக்கிறது.