சிந்துபாத் டீசரில் கலக்கும் விஜய்சேதுபதி மகன் சூர்யா….!

 

விஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்க வாசன் மூவிஸ் மற்றும் கே புரோடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க சிந்துபாத் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளன்று வெளியானது. இதையடுத்து தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியுள்ளது.

இப்படத்தில் தனது மகன் சூர்யாவை விஜய் சேதுபதி திருடனாக அறிமுகம் செய்துள்ளார்.
டீசரில் சூர்யா விஜய் சேதுபதியின் கழுத்தில் அமர்ந்து கொண்டு ஏதோ ஒரு பாடலுக்கு இருவரும் நடனம் ஆடும் விதமாக இந்த டீசர் அமைந்துள்ளது.