முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி….!

--

கடைசி விவசாயி, சங்கத்தமிழன், லாபம், சாயிரா நரசிம்ம ரெட்டி, மாமனிதன், உப்பென்னா ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தோனி , சச்சின் ஆகியோரது வாழ்க்கை வரலாறு படங்களாக வெளியான நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் புகழ் பெற்ற சிறந்த கிரிக்கெட் வீரர் ஒருவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தான் படமாக உருவாக இருப்பதாக செய்திகல் வெளியாகி வருகிறது.

இதில், முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.