ஆசிய குத்துச்சண்டை தகுதிச்சுற்று – இறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன்!

அம்மான்: ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தகுதிபெறுவதற்கான ஆசிய அளவிலான தகுதிச்சுற்று குத்துச்சண்டைப் போட்டிகளில், இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன் 69கிகி எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய வீராங்கனை மேரி கோம் 51கிகி எடைப்பிரிவு அரையிறுதியில், சீனாவின் யுவான் சங்கிடம் தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றினார்.

அரையிறுதிப் போட்டியில், உஸ்பெகிஸ்தான் நாட்டின் அப்லெய்கனை சந்தித்த இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணகுமார், காயமடைந்தாலும் தீரத்துடன் செயல்பட்டு, எதிராளியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியில், ஜோர்டான் நாட்டின் ஹூசைனை சந்திக்கவுள்ளார். 52கிகி எடைப்பிரிவில் இந்தியாவின் பிரபல வீரர் அமித் பங்கலுக்கு வெண்கலப் பதக்கம்தான் கிடைத்தது.