புதிய படத்தில் விக்ரம், துருவ் இணைகின்றனர்..ஒரே படத்தில் தந்தை மகன்..

நடிகர் விக்ரம் தற்போது அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ’கோப்ரா’ படத்திலும், மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’ படத்திலும் நடிக்கிறார். ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்திருக்கும் ’துருவ நட்சத்திரம்’படம் திரைக்கு வர தாமதமாகி வருகிறது.


இந்நிலையில் விக்ரம் நடிக்கும் 60வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கு கிறார். அதற்கான ஸ்கிரிப்ட் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அதேசமயம் தனுஷ் நடிக்கும் ’ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கி உள்ளார். இதன் போஸ்ட்புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.
இப்படத்துக்கு பிறகு விக்ரம் 60 படத்தை தொடங்க உள்ளார் கார்த்திக்சுப்பராஜ் இதில்தான் விக்ரம் மகன் துருவ் தந்தை யுடன் முதன்முறையாக  இணைந்து நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே ’ஆதித்ய வர்மா’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் தெலுங்கில் விஜய தேவர கொண்டா நடித்த ’அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக் ஆகும்.
கொரொனா தடைகாலம் முடிந்த பிறகு விக்ரம் 60 பற்றிய முழுமையான விவரம் தெரியவரும்.