’பேட்ட’ இயக்குநர் படத்தில் மகனுடன் இணையும் விக்ரம்..

’பேட்ட’ இயக்குநர் படத்தில் மகனுடன் இணையும் விக்ரம்..

ரொம்ப நாட்களாக வதந்தியாக இருந்த செய்தி இப்போது உண்மையாகியுள்ளது.

வேறொன்றும் இல்லை.

‘சீயான்’ விக்ரமுடன் அவர் மகன் துருவ் ஒரு படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்த படத்தை ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தை டைரக்ட் செய்த கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார்.

அனிருத் இசை அமைக்கிறார்.

அனிருத்துடன் விக்ரம் இணையும் முதல் படம் இது.

படத்தை தயாரிப்பவர், லலித் குமார்.

‘’ இந்த படத்தின் கதையை  இரண்டு மாதங்களுக்கு முன்னால், விக்ரமிடம் கார்த்திக் சுப்புராஜ் சொன்னதும், விக்ரமுக்கு மிகவும் பிடிப்போயிற்று.ஊரடங்கு முடிந்து நிலைமை சகஜமானதும் படப்பிடிப்பு ஆரம்பமாகும்’’ என்கிறார், தயாரிப்பாளர் லலித்.

தாதாக்கள் பின்னணியில் இந்த ஆக்‌ஷன் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.