சாமி 2-வில் பாடியிருக்கும் விக்ரம் – கீர்த்தி சுரேஷ்

விக்ரம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சாமி-2 படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று நடந்தது. இப்படத்தில் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் பாடலொன்றை பாடியிருக்கிறார்கள்.

இப்படத்தின் டிரெய்லர் கடந்த மாதம் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

2003-ம் ஆண்டில் நடிகர் விக்ரம் இயக்குநர் ஹரி கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் சாமி.  விக்ரமுக்கு ஜோடியாக  த்ரிஷா  நடித்தார். இவர்களுடன்  விவேக், ரமேஷ் கண்ணா என்று பல நட்சத்திரங்கள்   நடித்தனர்.

இந்த நிலையில்   கடந்த வருடம் சாமி-2 படத்தை இயக்கப் போவதாக இயக்குநர் ஹரி அறிவித்திருந்தார். அதன் படி இதற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கி  விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. அவ்வப்போது இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி இந்தப் படத்தின் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.

கடந்த ஜூன் மாதம் சாமி-2 படத்தின் டிரெய்லர்  வெளியிடப்பட்டது. 15 வருடங்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட சாமி படத்தில் இருந்ததைப் போலவே இந்த இரண்டாம் பாகத்திலும் நடிகர் விக்ரம் கட்டான உடலோடு, காவல்துறை அதிகாரியாக அதகளம் புரிந்திருக்கிறார்.  ஹரி இயக்கம் என்பதால் வழக்கம்போல அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் தூள்பரத்துகின்றன.

இந்தப் படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடித்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். (முதல்பாகத்தில் நடித்த த்ரிஷாவிற்கு பதிலாக ஐஸ்வர்யா நடிக்கிறார்.)

படத்தின்  டிரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்   பார்த்தனர்.

இந்த நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று நடந்த்து.. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே, “அதிரூபனே, மொளகாபொடியே…” என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது சாமி 2 படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதில், “புது மெட்ரோ ரயில்…” என்ற பாடலை விக்ரமும், கீர்த்தி சுரேஷூம் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப்பாடலை விவேகா எழுதியுள்ளார்