“பொன்னியின் செல்வன்” படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் விக்ரம்…!

 

செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் , அனுஸ்கா ஆகியோரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சமீபத்தில் நடந்த கேன்ஸ் விழாவில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக அவரே பேட்டி அளித்து உறுதி செய்தார்

இந்நிலையில் பேட்டி ஒன்றில் விக்ரம் இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாவது உண்மை தான். நானும் அதில் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட பெரும்பாலான நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து முடிந்து விட்டதாக கூறியுள்ளார் .இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.